ஆக்ரா (உத்தரபிரதேசம்): உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் தாஜ்நகரி 2 ஆம் கட்டடத்தில் ஹோட்டலில் வேலை பார்த்த பெண்ணை சனிக்கிழமை (நவ.11) இரவு கூட்டுப் பாலியல் செய்து அதனை வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து தாஜ்நகரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து நான்கு நபர்களைக் கைது செய்துள்ளனர். மேலும் ஒருவரைத் தேடி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
தாஜ்நகரி 2 ஆம் கட்டடத்தில் செயல்படும் ஹோட்டலில் பெண் ஒருவர் கத்துவது போல் சத்தம் கேட்க அக்கம் பக்கத்தினர் தாஜ்நகரி காவல் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். அதன் பேரில் காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். அப்போது அந்த பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து ஜிதேந்திர ரத்தோர், ரவி ரத்தோர், மணீஷ் குமார் மற்றும் தேவ் கிஷோர் ஆகிய நான்கு நபர்களைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர் மேலும் ஒருவரைத் தேடி வருவதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் தனது X பக்கத்தில், "இச்சம்பவத்தில் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும் தாஜ்நகரில் பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த வீடியோ பார்க்கும் போது மிகவும் பயமாகவும் மனிதத் தன்மை இல்லாததைக் காட்டுகிறது. உடனடியாக அந்த வீடியோ பதிவுகளை சமூக வலைத்தளத்தில் இருந்து அகற்ற வேண்டும் மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் சமூக வலைத்தளத்தை முடக்க வேண்டும் என்றும், தீபாவளி அன்று இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளேன். இப்படிப்பட்ட குற்றவாளிகள் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.