பூரினா (பிகார்):பிகாரில் உள்ள பூரினா கிராமத்தில் உள்ள பழங்குடியினர் 100 ஆண்டுகள் பழமையான முறையில் 'பட்ட மேளா’ என்றழைக்கப்படும் வித்தியாசமான முறையில் தங்களது துணையைத் தேர்ந்தெடுக்கும் விநோத முறை பின்பற்றப்பட்டு வருகிறது. அதன் மூலம் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் உள்ளது.
முன்னதாக, இப்பழங்குடியினரின் இளைய சமுதாயத்திற்கு தங்களது வாழ்க்கை துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர்களின் முந்தைய பழக்கமான 'பட்ட மேளா' மூலம் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிது. மேலும் இதில் பிகார் மட்டுமல்லாது நேபாளம், ஜார்க்கண்ட், வங்காளம் ஆகிய பகுதிகளிலிருந்தும் பழங்குடியைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கின்றனர்.