ராஜஸ்தான் மாநிலம் சதுல்பூரில் திகர்லா கிராமத்தைச் சேர்ந்த 19 வயதான இளம்பெண் ஒருவர், தனது தாயாரைச் சுத்தியலால் அடித்துக் கொலைசெய்துள்ளார். அச்சமயத்தில், வீட்டில் மிகவும் சத்தமாக இசை ஒலித்துக்கொண்டிருந்ததால், அக்கம்பக்கத்தினருக்குத் தாயாரின் கதறல் கேட்கவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும், தாயைக் கொலைசெய்த மகள், உடனடியாக காவல் துறைக்கும் தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறை உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பிவைத்தனர்.