அகர்தலா: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்து முதலமைச்சர் பிப்லாப் குமார் தேப் குமார் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
முதலமைச்சர் பிப்லாப் குமார் தேப் குமார் நேற்று (மார்ச் 21) தலாய் மாவட்டத்தின் மனுகாட் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், “கட்சித் தொண்டர்கள், மாவட்ட அளவிலான தலைவர்கள் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிகள் வலுவிழந்துவிட்டனர் என்று நினைக்கக் கூடாது. மாநிலத்தில் பேய்கள் இன்னமும் உள்ளன. அந்தப் பேய்கள் மாநிலத்தில் ஆட்சியில் இருந்தபோது வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் இல்லை.
சாலைப் போக்குவரத்து திட்டங்கள் நிறுத்தப்பட்டன. ஒப்பந்தப் பணிகளை எடுத்த பின்னரும் நிறுவனங்கள் பணி செய்யவில்லை” என்றார். தொடர்ந்து அவர் பேசுகையில், “2018இல், பிரதமர் நரேந்திர மோடி இடதுசாரிகளின் தவறான நடவடிக்கையிலிருந்து திரிபுராவை விடுவித்தார்" என்று கூறினார். மேலும் அடுத்து நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல்களில் பாஜக வெற்றி பெறும் என்று கூறினார்.