தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தடுப்பூசி போடனும், இல்லன கரோனா டெஸ்ட் எடுக்கனும் - கேரள மதுப்பிரியர்களுக்கு கெடுபிடி - கேரளாவில் கோவிட்-19 தடுப்பூசி

கோவிட்-19 தடுப்பூசி செலுத்தாதவர்கள் மது வாங்கவேண்டும் என்றால் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என கேரளாவில் புதுக் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது.

RT-PCR test
RT-PCR test

By

Published : Aug 11, 2021, 6:38 PM IST

இந்தியாவில் கரோனா பாதிப்பு குறைந்துவந்தாலும், கேரளாவில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகக் காணப்படுகிறது. மாநிலத்தில் கரோனா பரவலை தடுக்க புதுவிதமான முன்னெடுப்பை அரசு மேற்கொண்டுள்ளது.

கேரளாவில் உள்ள மதுபானக் கடைகளில் உரிய கட்டுப்பாடு நடவடிக்கைகளை அரசு ஏன் மேற்கொள்ளவில்லை என மாநில உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியது.

இதையடுத்து, மதுபானம் வாங்க புதிய உத்தரவை கேரளா அரசு பிறப்பித்துள்ளது. மதுபானம் வாங்க வரும் நபர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்தியிருக்க வேண்டும். இல்லையென்றால், அந்நபர் கரோனா ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொண்டு நெகட்டிவ் என்ற தரவை சமர்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மதுபானக் கடைகளில் மதுப்பிரியர்கள்

இந்த உத்தரவின் மூலமாவது தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கையை உயர்த முடியுமான என அரசு புதுவித யுக்தியை முயற்சித்துள்ளது.

இதையும் படிங்க:மழைக்காலக் கூட்டத்தொடர் - மக்களவை காலவரையன்றி ஒத்திவைப்பு

ABOUT THE AUTHOR

...view details