இந்தியா மற்றும் வளைகுடா நாடுகளின் பாதுகாப்பு சார்ந்த உறவு குறித்து ஆலோசனை மேற்கொள்ள முப்படை தலைமை தளபதி முகுந்த் நரவணே நாளை ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார்.
டிசம்பர் 7 முதல் 12ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் பயணத்தில் உள்ள இவர், பின்னர் அங்கிருந்து 13,14 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியா செல்கிறார்.
இது குறித்து ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ராணுவத் தளபதி ஒருவர் முதல் முறையாக இந்த இரு நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்கிறார். இந்தச் சந்திப்பில் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை மேற்கொள்ளப்படும். இரு நாடுகளின் பாதுகாப்பு உயர் அலுவர்கள் முக்கிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளன எனக் கூறினார்.