தமிழ்நாடு

tamil nadu

மலேரியாவை தடுக்குமா ஜீன் டிரைவ்?

By

Published : May 29, 2022, 4:05 PM IST

மலேரியாவை பரப்பும் அனாபிலிஸ் பெண் கொசுக்களின் உற்பத்தியை கட்டுப்படுத்தி, அதன் மூலம் மலேரியா பரவலை தடுக்கும் வழியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

GENE DRIVE
GENE DRIVE

உலகம் முழுவதும் மலேரியா காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த முடியாததும் மலேரியா காய்ச்சல் அதிகரிக்க காரணம். கடந்த 2020ஆம் ஆண்டில் 6 லட்சத்து 27 ஆயிரம் பேர் மலேரியா காய்ச்சலால் உயிரிழந்திருப்பதாகவும், 24 கோடிக்கும் அதிகமானோர் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

மலேரியாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டாலும், முழுவதுமாக அதனை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த நிலையில், ஜீன் டிரைவ் தொழில்நுட்பம் மூலம் மலேரியாவை தடுக்க ஆராய்ச்சியாளர்கள் முயற்சித்து வருகின்றனர். ஜீன் டிரைவ் என்பது, மரபணு மாற்றத்தைவிட சற்று மேம்பட்ட முறையாகும். இதன் மூலம் ஜீனின் மரபியலை மாற்ற முடியும். ஜீன்கள் செயல்படும் மரபியலை மாற்றி, புதிய மரபியலை புகுத்துவதாகும்.

இந்த முறை மூலம், மலேரியாவை பரப்பும் முக்கிய காரணியான அனாபிலிஸ் பெண் கொசுக்களின் உற்பத்தியை கட்டுப்படுத்தும் வழியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பெண் கொசுக்கள் உருவாவதையே தடுத்துவிட்டால், மலேரியாவை கட்டுப்படுத்திவிடலாம் என்றும், பெண் கொசுக்கள் இல்லை என்றால் அடுத்ததாக கொசு உற்பத்தியும் நடக்க வாய்ப்பில்லை என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

கொசுக்கள் மட்டுமல்லாமல் பிற நோய் பரப்பும் ஒட்டுண்ணிகளின் உற்பத்தியையும் கட்டுப்படுத்த ஜீன் டிரைவ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கின்றனர். தற்போது ஆய்வகத்தில் மட்டுமே நடத்தப்படும் ஜீன் டிரைவை, விரைவில் விலங்குகளிடம் சோதிக்க அனுமதி கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர். அதேநேரம் ஜீன் டிரைவ் தொழில்நுட்பத்தால் எதிர்காலத்தில் தீங்கு விளைவிக்கும் ஜீன் மாற்றங்களும் ஏற்படக்கூடும் என்பதால், மாற்று மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகே ஜீன் டிரைவை பயன்படுத்த வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: டெஸ்லா கார் உற்பத்தி ஆலை இந்தியாவில் அமைக்கப்படாது - எலான் மஸ்க் அதிரடி பதில்!

ABOUT THE AUTHOR

...view details