டெல்லி:இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி 137.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் பிரான்ஸ் நாட்டின் லூயி வுய்ட்டன் நிறுவன தலைவர் பெர்னார்ட் அர்னால்ட்டை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். அமெரிக்க தொழிலதிபர் எலோன் மஸ்க் முதலிடத்திலும், ஜெஃப் பெசோஸ் 2ஆவது இடத்திலும் உள்ளனர். இந்த தகவல் புளூம்பெர்க் பில்லியனர்கள் பட்டியலில் வெளியாகி உள்ளது.
ஆசிய கண்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களுக்குள் நுழைந்திருப்பது இதுவே முதல் முறை. உலக பணக்காரர்கள் பட்டியலில் 10ஆவது இடத்தில் இருந்த அதானி 2 மாதங்களுக்கு முன்பு பில் கேட்ஸை பின்னுக்குத் தள்ளி 4ஆவது இடத்திற்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது. எலோன் மஸ்க் மற்றும் ஜெஃப் பெசோஸ் ஆகியோரின் நிகர சொத்து மதிப்பு தற்போது உள்ள முறையே 251 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மற்றும் 153 பில்லியன் டாலர்களாகும்.