அமரவாதி: ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள முலைகலேடு கிராமத்தில் இன்று அதிகாலை பெரும் விபத்து ஒன்று நடந்துள்ளது. அதிகாலை 5 மணியளவில் ஒரு வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் வீடு தரைமட்டமானதுடன், அதையொட்டி இருந்த பக்கத்து வீட்டின் கூரையும் இடிந்து விழுந்தது.
இதில் வீட்டில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும் உயிரிழந்தனர். மேலும், இருவர் உயிருக்கு போராடி வரும் நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.