உத்தரகண்ட்:உத்தரகாஷி மாவட்டத்தின் சுனகர் பகுதியில் கனமழை காரணமாக, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று (ஜூலை 20) முதல் கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சாலையின் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் சீரமைப்பு பணி சவாலாக உள்ளதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.