மதுரா:உத்தரபிரதேச மாநிலம் மதுரா அருகே காரோட் கிராமத்தைச் சேர்ந்த 30 வயதான பெண்மணி ஒருவர், மே 24ஆம் தேதி வங்கியிலிருந்து பணம் எடுத்துக் கொண்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மூன்று பேர், அவரை கடத்திச் சென்றுள்ளனர்.
அந்த பெண்ணிற்கு போதைப்பொருளை கொடுத்து, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பிறகு அந்த பெண் தப்பிச் செல்லக்கூடாது என்பதற்காக, காலில் இருசக்கர வாகனத்தை ஏற்றி காயப்படுத்தி, அவரை புதருக்குள் தூக்கி வீசியுள்ளனர். சுயநினைவுக்கு வந்த பெண் கோசிகலா பகுதியில் உள்ள சுகாதார நிலையத்திற்கு சென்றார். பிறகு மேல் சிகிச்சைக்காக ஹரியானாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.