அமராவதி: ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த 23 வயதான மனவளர்ச்சி குன்றிய பெண், கடந்த 19ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த தாரா ஸ்ரீகாந்த் (26) என்ற இளைஞர், அவரை ஆசை வார்த்தை கூறி தான் ஒப்பந்த ஊழியராக பணிபுரியும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு இரவு முழுவதும் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் மருத்துவமனையில் சுற்றித்திரிந்த அந்த பெண்ணை, அங்கு பணிபுரியும் சென்னா பாபுராவ்(23), ஜோரங்குலா பவன் கல்யாண்(23) ஆகியோர் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.
இதனிடையே பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால், போலீசார் அலட்சியமாக இருந்ததாக் கூறப்படுகிறது. இதையடுத்து ஏப்.20ஆம் தேதி அந்த பெண் மருத்துவமனையில் இருப்பது தெரியவருகிறது.