டெல்லியை சேர்ந்த இளம்பெண் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனிடையே இவருக்கும் ரயில்வே ஊழியர் ஒருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. அந்த ஊழியர் ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக இப்பெண்ணிடம் கூறி வந்துள்ளார்.
இந்த நிலையில் ஜூலை 21ஆம் தேதி அந்த ரயில்வே ஊழியர், தனது மகனுக்கு பிறந்தநாள். வீட்டில் பார்ட்டி வைத்துள்ளோன். நீங்கள் கட்டாயம் வர வேண்டும் என்று இளம்பெண்ணிடம் செல்போனில் அழைப்பு விடுத்துள்ளார். இதனை நம்பி அந்த பெண்ணும் புறப்பட்டுள்ளார்.