தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆந்திராவில் பட்டியலின சிறுமி கூட்டுப் பாலியல் வன்புணர்வு.. 3 நாட்களுக்குப் பிறகு கால்வாயில் சிறுமியின் உடல் மீட்பு! - கூட்டு பாலியல் வன்புணர்வு

ஆந்திர மாநிலத்தில், பட்டியலின சிறுமியை காதலிப்பதாகக்கூறி, தனியாக லாட்ஜ்க்கு அழைத்துச் சென்று மற்றொரு நபருடன் சேர்ந்து கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

pocso
போக்சோ

By

Published : Jul 24, 2023, 1:38 PM IST

அமராவதி: கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த பட்டியலின சிறுமி (14) ஒருவர், ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி இருக்கும் தெருவுக்கு அடிக்கடி வரும் லோகேஷ் என்பவர் தான் உன்னை காதலிப்பதாக சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இம்மாதம் ஜூலை 20ஆம் தேதி சிறுமியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது நாம் இருவரும் தனியாக வெளியே செல்லலாம் எனக் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து சிறுமியும் பள்ளிக்கு செல்வதாகக் கூறி வெளியே வந்துள்ளார். மேலும், தனது பள்ளி பையை பள்ளிக்கூடத்திற்கு வெளியிலேயே வைத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் வந்து லோகேஷ் சிறுமியை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், சிறுமியை தனியார் லாட்ஜ்க்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தனது உறவினரான நரேந்திரனை அழைத்துள்ளார். பின்னர், இருவரும் சேர்ந்து சிறுமியை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து சிறுமி பள்ளிக்கு வெளியே வைத்திருந்த பையைப் பார்த்த பள்ளியின் பாதுகாவலர், தலைமை ஆசிரியரிடம் தகவல் தெரிவித்தார். இதுகுறித்து தலைமை ஆசிரியர் விசாரித்து சிறுமியின் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பள்ளிக்கு விரைந்து வந்த சிறுமியின் தாயிடம், “சிறுமி பள்ளிக்கு வரவில்லை” என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

மேலும், விசாரிக்கையில், சிறுமி வீடு திரும்பும்போது லிஃப்ட் கொடுத்த இளைஞன், பாலத்தில் இறக்கிவிட்டு தனது போனில் இருந்து லோகேஷ் என்ற இளைஞனுக்கு அழைத்ததாகக் கூறியுள்ளார். சிறுமியின் பெற்றோர் லோகேஷுக்கு போன் செய்து எதிர்ப்புத் தெரிவித்தனர். லாட்ஜில் இருந்த அவர், குழப்பமடைந்து, சிறுமியை வீட்டின் அருகே இறக்கிவிட்டார். இரவு ஆகியும் சிறுமி வீட்டிற்கு வராததால், பெற்றோர் பால்மேரு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பெற்றோர் கொடுத்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து லோகேஷ் மற்றும் நரேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் இருவரும் சேர்ந்து சிறுமியை கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கினர் என்பது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து சிறுமியை வீட்டின் அருகே இறக்கி விட்டுச் சென்றதாகவும் தெரிவித்தனர். இதனிடையே, நேற்று (ஜூலை 23) இரவு மொவ்வா மண்டலம் சூரசனிப்பள்ளி பயிர் கால்வாயில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

மன உளைச்சல் காரணமாக கால்வாயில் சிறுமி குதித்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கூட்டுப் பாலியல் வன்புணர்வு, தற்கொலைக்கு தூண்டுதல், எஸ்சி மற்றும் எஸ்டி தடுப்புச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:எல்லை தாண்டிய காதல் - காதலரை சந்திக்க பாகிஸ்தான் சென்ற இந்திய பெண்!

ABOUT THE AUTHOR

...view details