சிரோஹி: ராஜஸ்தான் மாநிலம், சிரோஹி மாவட்டத்தில், கடந்த 9ஆம் தேதி 4 கொள்ளையர்கள், இரவு நேரத்தில் திருடுவதற்காக ஒரு வீட்டிற்குள் சென்றுள்ளனர். அங்கிருந்த வெள்ளிப்பொருட்கள், 1400 ரூபாய் பணத்தைத் திருடியுள்ளனர்.
அப்போது, ஒரு அறையில் கணவன், மனைவி உறங்கிக்கொண்டிருந்ததைக் கண்டனர். குடிபோதையில் இருந்த நால்வரும், கணவன் கண்முன்னே மனைவியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து வெளியே சொல்லக்கூடாது என இருவரையும் மிரட்டிவிட்டு, அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட கணவன் மனைவி இருவரும், இரண்டு நாட்களாக வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளனர். திருட்டுச்சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்ததன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், விசாரணை நடத்தினர். முதலில் திருட்டுச்சம்பவம் குறித்து மட்டுமே தெரிவித்துள்ளனர். பின்னர் அவர்களது முகத்தைப் பார்த்து சந்தேகமடைந்த போலீசார், மீண்டும் அழுத்தமாக கேட்டபோது பாலியல் வன்கொடுமை குறித்து தெரிவித்துள்ளனர்.