தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

துர்கா பூஜையில் காந்தி சிலை அவமதிப்பு விவகாரம்: இந்து மகாசபா மீது வழக்குப்பதிவு - TMC condemn

மேற்கு வங்கத்தில் துர்கா பூஜையில் மகாத்மா காந்தியின் சிலை அரக்கர்கள் குழுச் சிலைகளுடன் வைக்கப்பட்டது தொடர்பாக அகில பாரதிய இந்து மகாசபா மீது வழக்குப்பதிவு செய்ய்ப்பட்டுள்ளது.

துர்கா பூஜையில் காந்தி சிலையை அரக்கனாக வைத்த விவகாரம்: இந்து மகாசபா மீது வழக்குப்பதிவு
துர்கா பூஜையில் காந்தி சிலையை அரக்கனாக வைத்த விவகாரம்: இந்து மகாசபா மீது வழக்குப்பதிவு

By

Published : Oct 4, 2022, 10:55 AM IST

துர்கா பூஜையில் காந்தி சிலை அவமதிப்பு

விவகாரம்: இந்து மகாசபா மீது வழக்குப்பதிவு

கொல்கத்தா:மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் அகில பாரதிய இந்து மகாசபை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட துர்கா பூஜையில், துர்கா தேவி சிலைக்குக்கீழே வைக்கப்பட்டிருந்த அரக்கர்களின் சிலைகளுக்கு மத்தியில் மகாத்மா காந்தியின் சிலையும் வைக்கப்பட்டிருந்தது.

மகாத்மா காந்தி சிலை அவமதிக்கப்பட்டதாக பல்வேறு தரப்பிலும் கண்டனம் எழுந்ததையடுத்து, காந்தி சிலையை அகற்ற போலீசார் அறிவுறுத்தினர். ஆனால், பூஜை அமைப்பாளர்கள் காந்தி சிலையை எடுக்காமல், அதன் தோற்றத்தை மட்டும் மாற்றினர். இதுதொடர்பாக அகில பாரதிய இந்து மகா சபையினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றன. குறிப்பாக பிகார் காங்கிரஸ் கமிட்டி செய்தித் தொடர்பாளர் அசித் நாத் திவாரி, சத்தீஸ்கர் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுஷில் ஆனந்த் சுக்லா, ராஜஸ்தான் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஸ்வர்ணம் சதுர்வேதி, திரிணாமுல் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் குனால் கோஷ், திருவனந்தபுரத்திலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டி.ராஜா, சிபிஎம் பொலிட்பீரோ உறுப்பினரான ஹன்னன் மொல்லா உள்பட பலரும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கொல்கத்தா காவல்துறையினர், அகில பாரதிய இந்து மகாசபாவின் துர்கா பூஜை அமைப்பாளர்கள் மீது பிரிவுகள் 188 (அரசு உத்தரவை மீறுதல்), 283 (பொதுவெளியில் தடை ஏற்படுத்துதல்), 153பி (தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவித்தல்) மற்றும் 34 ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க:துர்கா பூஜையில் காந்தி சிலை அவமதிப்பு - அரசியல் கட்சிகள் கடும் கண்டனம்!

ABOUT THE AUTHOR

...view details