பிளைட் சர்ஜன் என்பது விண்வெளி மருத்துவத்தில் நிபுணர்களாக திகழும் இந்திய விமானப்படையின் மருத்துவர்கள் ஆவர். ககன்யான் திட்டத்திற்காக விண்வெளி மருத்துவம் குறித்து கூடுதலாக அறிந்துகொள்ள இரண்டு பிளைட் சர்ஜன்கள் ரஷ்யா நாட்டிற்கு செல்கின்றனர் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
விண்வெளி மருத்துவ பயிற்சிக்காக ரஷ்யா செல்லும் இந்திய பிளைட் சர்ஜன்ஸ்! - விண்வெளி மருத்துவம்
டெல்லி: ககன்யான் திட்டத்திற்காக விண்வெளி மருத்துவம் குறித்து பயிற்சி பெற இரண்டு இந்திய பிளைட் சர்ஜன், ரஷ்யா செல்லவுள்ளனர்.
இது குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "விமான அறுவை சிகிச்சை நிபுணர்கள் விரைவில் ரஷ்யா புறப்படுகிறார்கள். அங்கு, அனுபவமிக்க ரஷ்யா பிளைட் சர்ஜன்ஸூடன் இணைந்து பணியாற்றவுள்ளனர். வீரர்களின் உடல்நிலை சீராக இருப்பது விண்வெளி திட்டத்தில் மிகவும் முக்கியமாகும். விண்வெளிக்கு புறப்படுவதற்கு முன்பும், பின்னரும், பயணத்தின் போதும் வீரர்களின் உடல்நிலையை பார்த்துக்கொள்வது பிளைட் சர்ஜன்ஸின் கடமையாகும்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இந்திய விமானப்படையின் நான்கு விமானிகள், விண்வெளி பயணத்திற்காக, மாஸ்கோவிற்கு அருகிலுள்ள காகரின் ஆராய்ச்சி மற்றும் சோதனை விண்வெளி பயிற்சி மையத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பயிற்சி பெற்றுவருகின்றனர். அவர்களின் பயிற்சியானது கரோனா தொற்று காரணமாக தாமதமாகியுள்ளது.