அணு சக்தி மற்றும் விண்வெளி இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இதுகுறித்து கூறுகையில், " இந்தியாவின் 75ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, 2022ஆம் ஆண்டில் ஐந்து முதல் ஏழு நாட்கள்வரை மூன்று பேர் கொண்ட குழுவினரை விண்வெளிக்கு ககன்யான் திட்டம் மூலம் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 10 ஆயிரம் கோடி ரூபாய் முதல்கட்டமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
முதல் ஆளில்லா விமான இயக்கம் 2021 டிசம்பருக்குத் திட்டமிட்டுள்ளோம். இரண்டாம் ஆளில்லா விமான பயணம் 2022 -2023இல் இடம்பெறும். அதனைத் தொடர்ந்து, ககன்யானின் மனித விண்வெளிப் பயணம் அமைந்திடும். ககன்யான் திட்டம் தொடர்பாக விண்வெளி வீரர்களுக்குப் பயிற்சி வழங்குவதற்கான நடைமுறை இறுதி செய்யப்பட்டுள்ளது. ககன்யானின் அடிப்படை வடிவமைப்பு நிறைவடைந்துவிட்டது.