மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் ஒன்றிய சாலைப் போக்குவரத்துத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோர் பங்கேற்றனர். இந்த விழாவில் பேசிய சரத் பவார் அமைச்சர் நிதின் கட்கரிக்கு புகழாரம் சூட்டினார்.
அவர் பேசியதாவது, "இந்த விழாவில் பங்கேற்க முக்கிய காரணம் நிதின் கட்கரிதான். அகமதுநகர் பகுதியில் நீண்ட நாள் கோரிக்கைகள் தீர்க்கப்பட்டு, அதன் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த திட்டப் பணிகளை நான் திறந்துவைக்க வேண்டும் என கட்கரி விரும்பினார். பொதுவாக திட்டப் பணிகளுக்கான விழா நடைபெற்றாலும் திட்டங்கள் செயலுக்கு வர பல காலங்கள் பிடிக்கும்.