தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரதமர் மோடி - ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா இருதரப்பு சந்திப்பு; வலுவடையும் வர்த்தகம்! - Delhi update news in tamil

PM Modi, Japanese PM Fumio Kishida Meeting: G20 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோர் இடையே இருதரப்பு சந்திப்பு நடைபெற்று. தற்போது, இருநாடு இணைப்பு, வர்த்தகம் மற்றும் பிற துறைகளில் ஒத்துழைப்புகளை மேம்படுத்துவது குறித்து விவாதம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

G20 Summit 2023: PM Modi, Japanese PM Fumio Kishida discuss cooperation in connectivity, commerce
பிரதமர் மோடி - ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா இருதரப்பு சந்திப்பு; வலுவடையும் வர்த்தகம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 9, 2023, 8:09 PM IST

டெல்லி:G20 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோர் இடையே இருதரப்பு சந்திப்பு நடைபெற்று. தற்போது, இருநாடு இணைப்பு, வர்த்தகம் மற்றும் பிற துறைகளில் ஒத்துழைப்புகளை மேம்படுத்துவது குறித்து விவாதம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தனது X தளத்தில், "இந்தியா-ஜப்பான் இடையேயான உறவுகள் குறித்து விவாதம் நடத்தப்பட்டது. ஃபுமியோ கிஷிடா உடன் ஆக்கப்பூர்வமான பேச்சுகள் நடத்தப்பட்டது. இந்தியா-ஜப்பான் இருதரப்பு உறவுகள், வர்த்தகம் மற்றும் பிற துறைகளில் ஒத்துழைப்பு மேம்படுத்த ஆர்வமாக உள்ளோம்" என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் நேற்று (செப்.8) தலைநகர் டெல்லி வந்த ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவிற்கு பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி உற்சாக வரவேற்பு அளித்தார். அப்போது எடுத்த புகைபடத்தை X தளத்தில் பதிவிட்டு ஜப்பானுடனான நமது நட்பு என்றென்றும் நிலைத்திருக்கட்டும் என பதிவிட்டார்.

இதையும் படிங்க:"இந்தியாவை சர்வதேச அளவில் காட்சிப்படுத்தும் வாய்ப்பு ஜி20 உச்சி மாநாடு" - IGIDR முன்னாள் துணைவேந்தர் மகேந்திர தேவ் கருத்து!

சீனாவில் ராணுவம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா உள்ளடக்கிய பிரீ & ஓபன் இந்தோ-பசிபிக் உறுதி செய்வதற்கான ஒத்துழைப்பில் கவனம் செலுத்துவது குறித்து விவாதம் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியா-ஜப்பான் இடையே கடந்த சில ஆண்டுகளாக அரசியல் உறவுகள் வலுவடைத்துள்ளது. தற்போது ஜப்பான் இந்தியாவின் 13ஆவது பெரிய வர்த்தகமாக உள்ளது. இந்தியா ஜப்பானின் 18ஆவது பெரிய வர்த்தகமாக உள்ளது. இந்தியாவில் முதல் ஜந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பட்டியலில் ஜப்பான் உள்ளது. மேலும், சீனாவின் ஆக்கிரப்பு பகுதிகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க விவாதிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் பிரதமர் ஃபுமியோ கிஷிடா மே மாதம் நடைபெற்ற G7 உச்சி மாநாட்டின் எடுக்கப்பட்ட முடிவின் படி பல்வேறு உலகளாவிய பிரச்னைகளில் ஜப்பானின் செயல்திறன்மிக்க பங்களிப்பைக் காட்ட திட்டமிட்டுள்ளார். ஹிரோஷிமாவில் நடந்த G7 மாநாட்டில் பிரதமர் மோடி கிஷிடாவை சந்தித்தார். அதற்கு முன்னதாக ஜப்பான் பிரதமர் மோடியை சந்திக்க இந்தியா வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:"நம்பிக்கையின்மையை அகற்ற மனிதநேய அணுகுமுறையை கடைப்பிடிப்போம்"- ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி முன்னுரை!

ABOUT THE AUTHOR

...view details