குருகிராம்: அரியானா மாநிலம் குருகிராமில் ஜி20 மாநாட்டின் வெளிநாட்டு அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று (மார்ச்.2) நடைபெறுகிறது. இதையடுத்து, வெளிநாட்டு அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அமைப்பு பிரநிதிகளை வரவேற்கும் வகையில் பூந்தொட்டிகள் கொண்டு விழா நடைபெறும் சுற்றுவட்டார பகுதி அலங்கரிக்கப்பட்டன.
ஜி20 மாநாடு அலங்காரத்திற்கு வைத்த பூந்தொட்டிகளை திருடியவர் கைது!
ஜி20 மாநாடு அலங்காரத்திற்காக வைக்கப்பட்டு இருந்த பூந்தொட்டிகளை இருவர் திருடிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், வரவேற்புக்காக வைக்கப்பட்ட பூந்தொட்டிகளை ஒருவர் தனது காரில் திருடிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், குருகிராம் சாலையில் ஆடம்பர காரில் சென்ற, திடீரென தன் காரை நிறுத்தினார். தொடர்ந்து அலங்காரத்திற்காக வைக்கப்பட்டு இருந்த் பூந்தொட்டிகளை அவர் தன் காரில் எடுத்துச் சென்றார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது. வீடியோ பதிவை கண்ட குருகிராம் போலீசார், ஜி20 மாநாடு அலங்காரத்திற்காக வைக்கப்பட்டு இருந்த பூந்தொட்டிகளை திருடிச் சென்ற நபரை கைது செய்தனர். இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், "அலங்கார பூந்தொட்டிகளை திருடிச் சென்ற 50 வயதான மன்மோகன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.