தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜி20 மாநாட்டில் விருந்து எப்படி? - சிறப்பு தொகுப்பு!

G20 summit foods arrangements: ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் VVIP விருந்தினர்களுக்கென ஜெய்ப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த நிறுவனம் வெள்ளி முலாம் பூசப்பட்ட பாத்திரங்கள் உள்ளிட்ட மேஜைப் பொருட்களை உருவாக்கியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 7, 2023, 11:40 AM IST

G20 Conference Preparations

டெல்லி:ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் VVIP விருந்தினர்களுக்கென ஜெய்ப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த நிறுவனம் வெள்ளி முலாம் பூசப்பட்ட பாத்திரங்கள் உள்ளிட்ட மேஜைப் பொருட்களை உருவாக்கியுள்ளது.

'ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரே எதிர்காலம்' என்ற ஒருமித்த கருத்தோடு உலகத் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணையும் ஜி20 மாநாடு வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெறவுள்ளது. முதன் முறையாக இந்த மாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்கியுள்ள நிலையில், இந்த மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகள் உலக அளவில் எதிரொலிக்கவுள்ளது.

இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட 20 நாடுகள் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ள நிலையில் டெல்லி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த நிலையில் உலக தலைவர்களை வரவேற்கவும், சிறப்பான விருந்தோம்பல் கொடுத்து உபசரிக்கவும் இந்தியக் கலாச்சார ரீதியாக பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் என்னென்ன ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

உலக தலைவர்களுக்காக வழங்கப்படும் உணவைப் பரிமாற வெள்ளி முலாம் பூசப்பட்ட பாத்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தட்டுகள் முதல் ஸ்பூன் வரை அனைத்தும் வெள்ளி மற்றும் தங்க முலாம் பூசப்பட்டு பிரத்தியேக வேலைப்பாடுகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. ஜெய்ப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த கைவினை கலைஞர் ராஜீவ் பபுவால் கூறுகையில், பழங்காலத்தில் ராஜாக்கள் வெள்ளி பாத்திரங்களைத்தான் பயன்படுத்தினார்கள் எனவும் அது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தரும் எனவும் கூறியிருந்தார்.

அதன் அடிப்படையிலும், இந்தியாவின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையிலும் உலக தலைவர்களுக்கு வெள்ளி முலாம் பூசப்பட்ட பாத்திரங்களில் உணவு பரிமாறவுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், நாடு முழுவதிலும் இருந்து வரவழைக்கப்பட்ட 200 கைவினைக் கலைஞர்களால் சுமார் 15 ஆயிரம் வெள்ளி முலாம் பூசப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு மனித வேலைப்பாட்டில் சுமார் 50 ஆயிரம் மணி நேரம் எடுத்துக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.

தாமிரம் உள்ளிட்ட வெவ்வேறு பொருட்களின் கலவையில் உருவாக்கப்பட்டுள்ள பாத்திரங்கள் மற்றும் பொருட்கள் வெள்ளி முலாம் பூசப்பட்டு ஜொலிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஜெய்ப்பூர், மேற்கு வங்காளம், கர்நாடகா உள்ளிட்ட நாட்டின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த கைவினைக் கலைஞர்கள் தங்கள் நுணுக்கமான வேலைப்பாட்டில் மேஜை பாத்திரங்களை வடிவமைத்துள்ளனர்.

முழுக்க, முழுக்க இந்தியாவில் இருந்து கிடைக்கப்பெற்ற உதிரிப் பாகங்கள் மற்றும் பொருட்களைக் கொண்டு அத்தனை பொருட்களும் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய காலத்திற்கான வடிவமைப்பு நுட்பங்களுடன் பாதி இயந்திர வேலைப்பாடும் இந்த பொருட்களை உருவாக்கும் பணியில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அது மட்டும் இன்றி பூக்கள், தேசியப் பறவை, தேசிய விலங்கு உள்ளிட்டவை அலங்கரிக்கப் பிரத்தியேக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்படிப் பல பிரத்தியேக திட்டமிடல்களுடன் நடைபெறும் இந்த ஜி.20 மாநாடு, இந்தியாவின் பெருமையை உலகறியச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையமான பாரத் மண்டபத்தில் இந்த ஜி.20 மாநாடு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Lahore sector war 1965:இந்தியா vs பாகிஸ்தான் : இந்திய ராணுவத்தின் லாகூர் செக்டார் தாக்குதல் தினம் இன்று.!

ABOUT THE AUTHOR

...view details