தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கைலாசாவில் வாழ விருப்பமா..? ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.. நித்தியானந்தா அழைப்பு.. - டிவிட்டரில் பதிவிட்டுள்ள சாமியார் நித்தியானந்தா

கைலாசாவில் குடியுரிமை பெறுவதற்கு, விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று நித்தியானந்தா அழைப்பு விடுத்துள்ளார்.

கைலாசாவில் வசிக்க குடியுரிமை பெறலாம்
கைலாசாவில் வசிக்க குடியுரிமை பெறலாம்

By

Published : Mar 4, 2023, 5:18 PM IST

பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கும் சூழலில், நித்தியானந்தா கடந்த 2019ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தப்பினார். போலீசார் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் இருக்கும் இடத்தை கண்டறிய முடியவில்லை. இதையடுத்து கடந்த 2020ஆம் ஆண்டு வீடியோ ஒன்றை வெளியிட்ட நித்தியானந்தா கைலாசா (United States Of Kailasa) என்ற நாட்டை உருவாக்கியுள்ளதாக கூறினார்.

தனி கொடி, நாணயம், அரசுத்துறைகள் உள்ளிட்டவற்றை வெளியிட்டு அதிர்ச்சி அளித்தார். எனினும் அந்த நாடு எங்கிருக்கிறது என்பதை தெளிவாக அறிய முடியவில்லை. ஈக்வடார் நாட்டில் ஒரு தீவை விலைக்கு வாங்கி, அதற்கு கைலாசா என நித்தியானந்தா பெயர் சூட்டியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே சமூக வலைதளங்களில் பல்வேறு வீடியோக்களை சாமியார் நித்தியானந்தா பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், டிவிட்டரில் நேற்று (மார்ச் 3) இரவு அவர் வெளியிட்டுள்ள பதிவு பேசு பொருளாகியுள்ளது. கைலாசா நாட்டில் குடியேற விரும்புபவர்கள், இலவசமாக ஆன்லைனில் குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் டிவிட்டர் பதிவுகள் உள்ளன. அதில் உள்ள QR கோர்டை ஸ்கேன் செய்யும் போது Kailaasa.org என்ற இணையதள பக்கத்துக்கு செல்கிறது. அதில் குடியுரிமை பெறுவதற்கான சில பொதுவான கேள்விகள் கேட்கப்படுகின்றன.

இதற்கிடையே, ஜெனிவாவின் ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார கூட்டத்தில் சாமியார் நித்தியானந்தாவின் சிஷ்யை விஜயப்ரியா பங்கேற்றார். அப்போது பேசிய அவர், "நித்தியானந்தா இந்தியாவில் துன்புறுத்தப்படுகிறார். மனித உரிமை மீறல்களுக்கு ஆளாகியிருக்கிறார். நித்தியானந்தா மற்றும் கைலாசாவை சேர்ந்தவர்கள் துன்புறுத்தப்படுவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? கைலாசா 150 நாடுகளின் தூதரகரங்களை கொண்டுள்ளது"என்றார். கைலாசாவின் பிரதிநிதி ஐநாவில் உரையாற்றியதாக, நித்தியானந்தா தரப்பில் பெருமிதம் தெரிவிக்கப்பட்டது.

இதனால் கைலாசாவை ஐநா அங்கீகரிக்குமா என பரவலாக கேள்வி எழுந்தது. எனினும் இதுவரை கைலாசாவை, ஒரு நாடாக ஐநா அங்கீகரிக்கவில்லை. பொதுவாக அங்கீரிக்கப்பட்ட மக்கள் தொகை, அரசு, பிற நாடுகளுடன் நல்லுறவு வைக்கும் திறன் ஆகியவற்றை பொறுத்தே குறிப்பிட்ட பகுதியை நாடாக அங்கீகரிக்க முடியும். அதை மனதில் வைத்து தான், சர்வதேச மன்றத்தில் அங்கீகாரம் வேண்டும் என்பதற்காக சிஷ்யைகளை, ஐநாவுக்கு அனுப்பினார் நித்தியானந்தா. ஐநா மனித உரிமைகள் அமைப்பை பொறுத்தவரை தனி மனிதர், தொண்டு நிறுவனங்கள் தங்கள் கருத்துக்களை முன்வைக்க வாய்ப்பு வழங்கும். தொண்டு நிறுவனம் என்ற ரீதியில்தான் கைலாசாவின் பிரதிநிதிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதாக ஐநா விளக்கம் அளித்துள்ளது.

இதையும் படிங்க: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆட்டோவில் பயணம்

ABOUT THE AUTHOR

...view details