டெல்லி:இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (ISRO) பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட் ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இன்று (டிச.17) விண்ணில் ஏவப்படவுள்ளது. தற்போது ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
விண்ணில் பாய பிஎஸ்எல்வி சி-50 தயார் - எரிபொருள் நிரப்பும் பணிகள் நிறைவு
ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று விண்ணில் ஏவப்படவுள்ள பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் பணிகள் நிறைவடைந்ததாக, இஸ்ரோ தெரிவித்துள்ளது.
பிஎஸ்எல்வி சி-50
தகவல் தொடர்பு செயற்கைக்கோள் சிஎம்எஸ்-01-ஐ ஏந்தியப் படி பிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் பாயவுள்ளது. இந்த சிஎம்எஸ்-01 இந்தியாவின் 42வது தகவல் தொடர்பு சேவைக்கான செயற்கைக்கோளகும். இது சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 77ஆவது விண்வெளி திட்டமாகும். அதேபோல் பிஎஸ்எல்வி-சி50 பிஎஸ்எல்வி ரகத்தின் 22ஆவது ராக்கெட்டாகும்.
இதையும் படிங்க:ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி சி-49!