கொச்சி : கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் அருங்காட்சியகத்தில், இயேசு நாதரை காட்டிக்கொடுக்க யூதாஸ் பெற்ற 30 வெள்ளிக் காசுகளில் இரு வெள்ளிக் காசுகள், மோசஸின் சிலுவை, இன்று வரை எரியும் முகமது நபி பயன்படுத்திய ஆலிவ் எண்ணெய் விளக்கு, இயேசு கிறிஸ்து சிலுவையிலிருந்து கீழிறக்கப்பட்டபோது துடைக்க பயன்படுத்திய வெள்ளைத் துணி, மைசூரு அரண்மனையின் ஆவணங்கள், திப்பு சுல்தானின் கிரீடம், முகலாய பேரரசர்களின் நூலகங்களை அலங்கரித்த புத்தகங்கள், சத்ரபதி சிவாஜி பயன்படுத்திய பழங்கால பொருள்கள், டாவின்சியின் அசல் ஓவியங்கள் ஆகியவை இருப்பதாக கூறப்படுகிறது.
மான்சன் மாவுங்கல்
இந்த அருங்காட்சியகத்தின் உரிமையாளர் மீது பலர் அளித்த புகாரின் அடிப்படையின் அதன் உரிமையாளர் மான்சன் மாவுங்கல் (Monson Mavungal) காவலர்களால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த அருங்காட்சியகம் கொச்சியில் உள்ள கலூரில் செயல்பட்டுவருகிறது. இங்கு பழங்கால அரிய பொருள்கள் பல இருப்பதாக தொடர்ச்சியாக விளம்பரப்படுத்தப்பட்டுவந்தது.
இந்தப் பொருள்களை மான்சன் மாவுங்கல் தனது வலைப்பக்கம் (Monsonmavungal.com) மற்றும் வலையொளி (Youtube) கணக்கு வாயிலாக விளம்பரப்படுத்தி விற்பனை செய்துவந்தார். மான்சன் மாவுங்கல் ஒரு கைதேர்ந்த விற்பனையாளர். இவரை உயர்ந்த மனிதர் என நம்பி ஆயிரக்கணக்கானோர் ஏமாந்துள்ளனர். இவர் ஜெர்மனியில் அழகுகலை பயின்றவர், 8 முனைவர் பட்டம் பெற்றவர் என்று மக்கள் நம்பவைத்துள்ளார்.
காயகல்ப சிகிச்சை
தற்போதைய கேரள காங்கிரஸ் தலைவர் கே. சுதாகரனுக்கு காயகல்பம் (வயதை தடுக்கும்) சிகிச்சை அளித்துள்ளார். இவர் பழங்கால பொருள்கள் வணிகத்தில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக ஈடுபட்டுவந்துள்ளார். இவர் மீது கோழிக்கோட்டை சேர்ந்த யாகூப் என்பவர் முதலமைச்சரிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில் காவலர்கள் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
மான்சன் மாவுங்கல் யாகூப்பிடம் ரூ.25 லட்சம் வாங்கி ஏமாற்றியுள்ளார். யாகூப் போல் பலரும் மான்சன் மாவுங்கலிடம் பணத்தை கொடுத்து ஏமாந்துள்ளனர். அந்த வகையில் ரூ.10 கோடி வரை மோசடி செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மான்சன் மாவுங்கல் தனது அருங்காட்சியகத்தில் உள்ள பொருள்கள் பல நாடுகளிலிருந்து பெறப்பட்டவை என்று கூறிவருகிறார்.
போலி பழங்கால பொருள்கள்
ஆனால் இதெல்லாம் ஆலப்புலாவின் சேர்தலாவில் உள்ள தச்சர்களால் தயாரிக்கப்பட்டது என்கிறார் அவரது நெருங்கிய நண்பர் அஜி. இவரது அதிக விலை சேகரிப்பாக கருதப்படும் திப்பு சுல்தான் பயன்படுத்திய பொருள்கள், சேர்தலாவில் உள்ள தச்சர்களால் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இங்குள்ள பல பொருள்கள் சேர்தலாவில் உள்ள தச்சர்களால் பழங்கால காதலர்களின் விருப்பத்திற்கேற்ப மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தான் சம்பாதித்த பணத்தை சமூக ரீதியாக வளர பயன்படுத்தினார். அரசு உயர் அலுவலர் மற்றும் சினிமா நடிகர், நடிகை வட்டாரங்களுடன் தொடர்பை விரிவுப்படுத்தினார்.
முக்கிய பிரமுகர்களுடன் தொடர்பு