திருவனந்தபுரம் (கேரளா): 2016ஆம் ஆண்டு பினராயி விஜயன் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை கூடிய சட்டப்பேரவைகளில் 109 சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
பினராயி விஜயன் அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் 22 அமர்வுகளில் 232 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம் நடந்துள்ளது. மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் இந்த வருடம் நடைபெறவிருக்கிறது.
இந்நிகழ்வின் நடுவே, பினராயி ஆட்சிகாலத்தில் மாறுபட்ட 275 சட்ட மசோதாக்கள் பேரவையில் முன்வைக்கப்பட்டன. இதில், 87 அரசு மசோதாக்கள், 22 நிதி மற்றும் ஒதுக்கீட்டு மசோதாக்கள் உள்பட 109 மசோதாக்கள் சட்டங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதன்மூலம், சட்டத்தை உருவாக்கும் துறையில் பேரவை குறிப்பிடத்தக்க நடவடிக்கை எடுத்துள்ளது என்று சபாநாயகர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பேரவையின் அமர்வுகளின் போது நடந்த முக்கியமான நிகழ்வுகளை நினைவு கூர்ந்த சபாநாயகர், மே 25, 2017 அன்று, ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட கேரள கடல் வாரிய மசோதா 2014ஐ ரத்து செய்யக் கோரும் தீர்மானத்தை பேரவை நிறைவேற்றியது என்றார்.
குஜராத் மாநிலத்துக்கு அடித்த ஜாக்பாட் - வருகிறது டெஸ்லா இந்தியா!
2018ஆம் ஆண்டில் சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட கேரள நிபுணத்துவ கல்லூரிகளின் (மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை முறைப்படுத்துதல்) மசோதாவை ஆளுநர் நிராகரித்தார். இது மாநில சட்டப்பேரவை வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக பார்க்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
இதுவரை பேரவையில் 1964, 1968, 1969, 1972, 1975, 2005 ஆம் ஆண்டுகளில் முழு நிதிநிலை அறிக்கையை அரசு நிறைவேற்றியுள்ளது. மேலும் அரசின் சொந்த தொலைக்காட்சி அலைவரிசையான சபா டிவி, ஓடிடி தளம் ஆகியவை பினராயி அரசால் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.