தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இமாச்சலப் பிரதேசத்தில் தொடரும் பனிப்பொழிவு! - இமாச்சல பிரதேசத்தில் தொடரும் பனிப்பொழிவு

சிம்லா : இன்று (பிப்.4) இமாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையும், பனிப்பொழிவும் ஏற்பட வாய்ப்புள்ளதாக வனிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

fresh-snowfall-in-himachal
fresh-snowfall-in-himachal

By

Published : Feb 4, 2021, 3:20 PM IST

மத்திய தரைக்கடல் பகுதியில் உருவான புயல் காரணமாக இமாச்சல் பிரதேசத்தின் நர்கண்டா, குஃப்ரி, ஜாகு, சரப்ரா போன்ற பகுதிகளில் இன்று (பிப்.4) பனிப்பொழிவு ஏற்பட்டது.

இதுகுறித்து, வானிலை ஆய்வுமையம் கூறுகையில், இந்தப் பனிப்பொழிவு இரண்டு நாள்கள் நீடிக்கும் எனவும், நாளை முதல் வெப்பநிலை உயரும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், மேற்கு இமயமலைப் பகுதியில் நாளை (பிப்.5) வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், பனிப்பொழிவும், ஆலங்கட்டி மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இன்று இமாச்சலப் பிரதேசத்தில் கனமழையும், பனிப்பொழிவும் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

சிம்லாவில் அதிகபட்ச வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸாகவும், நேற்று குறைந்தபட்சம் 4.5 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க: இதுதான் இந்தியாவின் ஆன்மா... வைரல் புகைப்படத்தை பார்த்து நெகிழ்ந்த ஆனந்த் மகேந்திரா!

ABOUT THE AUTHOR

...view details