தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 27, 2021, 2:55 PM IST

ETV Bharat / bharat

ஆயுர்வேத பயனார்களுக்கு புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

டெல்லி: கரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில், ஆயுர்வேதம், யுனானி மருத்துவங்களைப் பின்பற்றுபவர்களுக்கு புதிய வழிகாட்டுதல்களை ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

ஆயுஷ்
ஆயுஷ்

கரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தின் காரணமாக, ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருத்துவத்திற்கு ஏற்பட்டுள்ள தேவையைக் கருத்தில் கொண்டு திருத்தப்பட்ட புதிய வழிகாட்டுதல்களை ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

ஆயுர்வேதம்

இந்த வழிகாட்டுதல்கள் ஆயுஷ் அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட ஆயுஷ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு குழுவுடன் அதிகாரமளிக்கப்பட்ட குழு நடத்திய விரிவான ஆலோசனைக்குப் பின்னர் இந்த வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஆயுர்வேதம்

தங்களை வீட்டில் தனிமைப்படுத்தியுள்ள கரோனா நோயாளிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வீட்டிலிருந்தே பாதுகாத்து கொள்ள தேவையான பராமரிப்பு குறிப்புகள் மற்றும் ஆயுஷ் நடைமுறைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை அதிகரிப்பதே இந்த புதிய வழிகாட்டுதலுக்கான நோக்கம் என ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆயுர்வேதம்

இதைப் பின்பற்றும்போது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எனவும், அமைச்சகம் அந்த வழிகாட்டுதலில் குறிப்பிட்டுள்ளது. பருவகால மாற்றங்களை சமாளிக்க, நோயாளிகளுக்கு தயாரிக்கும் கசாயத்தில் ஆடா தோடை, அதிமதுரம், அமிர்த வல்லி இலை ஆகியவற்றை தேவைக்கேற்ப சேர்த்துக் கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

மூலிகை

லேசான அறிகுறிகளுடன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு பயன்படும் விதமாக, ஆயுஷ் -64, அஸ்வகந்தா மாத்திரைகள் போன்றவையும் வழிகாட்டுதல்களில் சேர்க்கப்பட்டுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details