தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரான்ஸ் நாட்டு தேசிய தின விழா - போர் நினைவு சின்னத்தில் மரியாதை செய்த பிரெஞ்ச் துணை தூதர்!

பிரான்ஸ் நாட்டு தேசிய தின விழாவை ஒட்டி, புதுச்சேரி கடற்கரைச்சாலை போர் நினைவுச் சின்னத்தில் துணை தூதர் லிசே போட் பரே மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

By

Published : Jul 14, 2022, 4:09 PM IST

பிரான்ஸ் நாட்டு தேசிய தின விழா - போர் நினைவு சின்னத்தில் மரியாதை செய்த பிரெஞ்ச் துணை தூதர்!
பிரான்ஸ் நாட்டு தேசிய தின விழா - போர் நினைவு சின்னத்தில் மரியாதை செய்த பிரெஞ்ச் துணை தூதர்!

புதுச்சேரி: கடந்த 1789 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி பிரான்ஸ் நாட்டில் இருந்த மன்னராட்சியை, பாரீஸ் நகரில் உள்ள பஸ்தி என்ற சிறைச்சாலையை மக்கள் புரட்சி மூலம் தகர்த்து முடிவுக்கு கொண்டு வரப்பட்டு மக்களாட்சி நிறுவப்பட்டது. இந்த தினம் பிரான்ஸ் நாட்டு தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது. மேலும் மக்களாட்சி வந்த காலத்தில் மின்சாரம் இல்லாததால், மக்கள் தீப்பந்தம் ஏந்தி புரட்சி செய்து வென்றனர்.

எனவே இத்தினத்தை நினைவு கூறும் வகையில், பிரான்ஸ் நாடு முழுவதிலும் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் வாழும் அனைத்து நகரங்களிலும் ஜூலை 13 ஆம் தேதி தீப்பந்த பேரணி ஊர்வலம் நடைபெறும். இந்நிலையில் புதுச்சேரியில் நேற்று இரவு நடைபெற்ற மின்விளக்கு ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பிரான்ஸ் நாட்டு தேசிய தின விழா - போர் நினைவு சின்னத்தில் மரியாதை செய்த பிரெஞ்ச் துணை தூதர்!

தொடர்ந்து இன்று (ஜூலை 14) புதுச்சேரி கடற்கரைச்சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் பிரெஞ்ச் துணை தூதர் லிசே போட் பரே, ஆட்சியர் வல்லவன் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் பிரெஞ்ச் ராணுவ வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர், பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் இந்தியா, பிரான்ஸ் நாட்டின் தேசிய கீதங்கள் ஒலிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

இதையும் படிங்க:புதுச்சேரி மத்திய சிறை ஆசிரமம் போல் அழகாக உள்ளது: உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

ABOUT THE AUTHOR

...view details