டெல்லி:பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீன்-யவ்ஸ் லு டிரையன் அதிகாரப்பூர்வ மூன்று நாள்கள் அரசு பயணமாக இன்று இந்தியா வருகிறார். இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஜீன்-யவ்ஸ் லு டிரையன் ஆகியோர் இரு தரப்பு ஒப்பந்தம், உடன்பாடுகள் மற்றும் பரஸ்பர நம்பிக்கைகள் குறித்து பேசுவார்கள்” எனத் தெரவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து காலநிலை மாறுபாடுகள் குறித்து சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடமும் ஜீன்-யவ்ஸ் லு டிரையன் ஆலோசனை நடத்துகிறார். இந்தியா- பிரான்ஸ் இடையே 1998ஆம் தூதரக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஜீன்-யவ்ஸ் லு டிரையன் வருகையின் போது, பாதுகாப்பு, வர்த்தகம், காலநிலை மாறுபாடு, குடியுரிமை, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசப்படுகின்றன.