தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி இலவசம் - பிரதமர் மோடி - அனைவருக்கும் தடுப்பூசி இலவசம்

மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று ஜூன் 21 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் தடுப்பூசி இலவசம்
அனைவருக்கும் தடுப்பூசி இலவசம்

By

Published : Jun 8, 2021, 12:10 PM IST

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி (ஜூன் 7) நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர், "மாநிலங்களுக்கு தேவையான கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து வழங்கும்.

வரும் 21ஆம் தேதி முதல் 18 வயதை கடந்த அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கப்படும். தனியார் மருத்துவமனைகளுக்கு 25 விழுக்காடு தடுப்பூசி வழங்கப்படும்.

தடுப்பூசி அளிக்க சேவை கட்டணமாக தனியார் மருத்துவமனைகள் ரூ.150 மட்டுமே வசூலிக்க வேண்டும். இது தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள் அடுத்த இரு வாரத்தில் வெளியிடப்படும்" என்றார்.

இதையும் படிங்க: 'கறுப்புப் பூஞ்சை சிகிச்சைக்கு சிறப்பு வார்டு அமைக்கப்படும்':மா.சுப்பிரமணியம்

ABOUT THE AUTHOR

...view details