புதுச்சேரி: நாடு முழுவதும் கரோனா நோய் தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் புதுச்சேரி வில்லியனூர் புறவழி சாலையில் உள்ள அக்சயா பெட்ரோல் பங்க்கில் தடுப்பூசி போடும் முகாம் இன்று நடைப்பெற்றது.
இதில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட முன்கள பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது. அதேபோல் பொதுமக்களுக்கு அரை லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது. இம்முகாமை மாநில எதிர்க்கட்சி தலைவர் சிவா தொடங்கிவைத்தார்.