டெல்லி:நாடு முழுவதும், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு அனுமதியளித்த மத்திய அரசு, அவர்கள் அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசே செலுத்த முடிவுசெய்துள்ளது.
மத்திய அமைச்சரவைக்கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் நாடு விடுதலைப்பெற்று 75 ஆண்டுகள் ஆகும் நிலையில் அடுத்த 75 நாட்களுக்கு இலவச பூஸ்டர் டோஸ் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், ‘‘இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதையொட்டி இன்று (ஜூலை 15) முதல் 75 நாட்களுக்கு 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் பூஸ்டர் டோஸ் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்’’ என்றார்.