தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரக்‌ஷாபந்தன் தினத்தில் பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணம்! - பிகாரில் இலவச பேருந்து பயணம்

ஆகஸ்ட் 22ஆம் தேதி ரக்‌ஷாபந்தன் தினத்தன்று பெண்கள் இலவசமாக பேருந்தில் பயணம் மேற்கொள்ளலாம் என பிகார் மாநில அரசு அறிவித்துள்ளது.

Rakshabandhan
Rakshabandhan

By

Published : Aug 12, 2021, 12:49 PM IST

ஆகஸ்ட் 22ஆம் தேதி ரக்‌ஷாபந்தன் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. ஆண், பெண் சகோதரத்துவத்தை போற்றும் விதமாக இந்த ரக்‌ஷாபந்தன் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் பெண்களுக்கு ஒரு அதிரடி சலுகையை பிகார் மாநில அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, ஆகஸ்ட் 21ஆம் தேதி நள்ளிரவு முதல் ஆகஸ்ட் 22ஆம் தேதி நள்ளிரவு வரை பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என பிகார் மாநில அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாநில போக்குவரத்துக் கழக நிர்வாகி ஷியாம் கிஷோர் கூறுகையில், ”பெண்களுக்கு பஸ் பாஸ் போன்ற பயண சலுகைகளை மாநில அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது. அத்துடன் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:’60% மக்களின் குரல் ஒடுக்கப்படுகிறது’ - எதிர்க்கட்சிகள் பேரணியில் ராகுல் குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details