தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுவை பெண்ணிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி மூன்று லட்ச ரூபாய் மோசடி... - Pudhuchery DGP

புதுச்சேரியில் பெண்ணிடம் வேலை வாங்கி தருவதாக கூறி மூன்று லட்ச ரூபாய் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 17, 2022, 1:08 PM IST

Updated : Sep 20, 2022, 12:13 PM IST

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள உள்ளூா் தொலைகாட்சி சேனலில் கடந்த ஜூலை 1 ஆம் தேதி கம்போடியா நாட்டில் ரூ. ஒரு லட்சம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு உள்ளதாக முதலியாா்பேட்டையைச் சோந்த முருகன் (48) என்ற முகவா் விளம்பரம் செய்திருந்தாா்.

இதைப் பாா்த்த புதுச்சேரியைச் சோந்த 25 வயது பெண் ஒருவா், அவரை அணுகி வேலை விவரங்கள் கேட்டறிந்துள்ளார். அந்தப் பெண்ணிடம் முருகன் ரூ.3.25 லட்சத்தைப் பெற்றுக் கொண்டு கம்போடியாவுக்கு சுற்றுலா விசாவில் ஒரு நிறுவனத்துக்கு அனுப்பிவைத்துள்ளார்.

அங்கு சட்ட விரோத செயல்களில் ஈடுபடுமாறு அந்த நிறுவனத்தின் மேலாளரும், ஜான் என்பவரும் அந்தப் பெண்ணைத் துன்புறுத்தியுள்ளனர். பின் அங்கிருந்து இந்தியா் ஒருவரின் உதவியுடன் அந்தப் பெண் தப்பி தாயகம் வந்துள்ளார்.

இதுகுறித்து புதுவை டிஜிபியிடம் கடந்த (செப்.12) ஆம் தேதி அந்தப் பெண் புகாா் அளித்தார். இதுகுறித்து சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதையும் படிங்க: சிறுவர்களிடம் தீண்டாமை விதைக்கும் விதமாக பேச்சு...பெட்டிக்கடைக்காரர் கைது...

Last Updated : Sep 20, 2022, 12:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details