டெல்லி:உலகம் முழுவதும்கரோனா தொற்று உருமாற்றம் அடைந்து ஆல்பா, பீட்டா, காமா, லாம்ப்டா, டெல்டா, ஒமைக்ரான் என்று பரவி வருகிறது. உருமாறிய வேரியண்ட்டுகள் கரோனாவை போல உயிர்ப் பலி, தீவிர நோய் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் தொற்று பரவல் முற்றிலும் குறைந்தபாடில்லை. இதனிடையே பிரிட்டனில் ஒமைக்ரான்-டெல்டா தொற்றுகள் புதிதாக டெல்டாக்ரான் தொற்றாக உருமாற்றம் அடைந்து பரவிவருகிறது.
இந்த சூழலில் இந்தியாவில் கரோனா தொற்றின் நான்காம் அலை ஜூனில் தொடங்கி, ஆகஸ்ட் மாதம் உச்சமடையும் என்று ஐஐடி கான்பூர் கணித்துள்ளது. இதுகுறித்து ஐஐடி கான்பூர் தரப்பில், இந்தியாவில் கரோனா தொற்றின் நான்காம் அலை இந்தாண்டு ஜூன் 22ஆம் தேதியில் தொடங்கி, ஆகஸ்ட் 23ஆம் தேதி வாக்கில் உச்சம் அடையும். இதையடுத்து அக்டோபர் 24ஆம் தேதி வாக்கில் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறையத்தொடங்கும்.