நெல்லூர்( ஆந்திரப் பிரதேசம்): நெல்லூர் மாவட்டத்திலுள்ள பெரரெட்டிப் பள்ளி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் தான் வேணுகோபால். இவருக்கு இரட்டை மகள்கள் உண்டு. இந்நிலையில், நேற்று(ஜூன் 15) இவர் தனது வீட்டில் தன் 4 வயது மகளை வைத்து ஓர் விநோத பூஜை செய்துள்ளார்.
அந்தப் பூஜையில், குங்குமத்தை எடுத்து தனது மகளின் வாயில் வைத்து அடைத்துள்ளார், வேணுகோபால். இதனால் மூச்சுதிணறியதால் கதறிய சிறுமியின் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து ஓடி வந்து சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் சிகிச்சைப் பலனின்றி அச்சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.