நொய்டா: உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவில் இன்று(செப்.20) குடியிருப்பு வளாகத்தின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் சுவற்றின் அருகில் இருந்த பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற மீட்புப்படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் இடிபாடுகள் அகற்றப்பட்டு, அதில் சிக்கியவர்களை மீட்டனர்.