ஸ்ரீநகர்: இமயமலையில் அமைந்துள்ள அமா்நாத் குகை கோயிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் புனித யாத்திரை செல்வது வழக்கம். கரோனா ஊரடங்கு காரணமாக இந்த யாத்திரை கடந்த மூன்று ஆண்டுகளாக நடக்கவில்லை. இந்தாண்டு தொடங்கியுள்ளது. அந்த வகையில், அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள நுன்வான் முகாமிலிருந்து முதல் குழு 2,750 பக்தர்களுடன் நேற்று (ஜூன் 30) கிளம்பியது.
இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் அமர்நாத் யாத்திரைக்காக காரில் ஜம்மூ காஷ்மீருக்கு வந்தனர். இந்த கார் ஷெர்பி பி பனிஹால் அருகே விபத்தில் சிக்கியது. இதனால் காரிலிருந்த நான்கு பக்தர்கள் படுகாயமடைந்தனர். தகவலறிந்த உள்ளூர் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து நான்கு பேரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர்.