செரைகேலா: ஜார்கண்ட் மாநிலம் செரைகேலா - கார்ஸ்வான் மாவட்டத்தில் கமாரியா ரயில் நிலையம் உள்ளது. இந்த நிலையில், இந்த ரயில் நிலையத்தின் அருகே இன்று (ஜன. 18) மாலை ஒடிசா மாநிலம் பூரி செல்லும் உத்கல் எக்ஸ்பிரஸ் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் ரயில்வே பாதுக்காப்பு துறையினர் (RPF) சம்பவ இடத்திற்கு விரைந்து 4 பேரது உடலையும் மீட்டனர். இவர்கள் அப்பகுதிக்கு அருகே குடிசையில் வசிப்பவர்கள் எனவும், இவர்கள் 4 பேரும் சுமார் மாலை 6.55 மணி அளவில் ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது இந்த விபத்து நடந்துள்ளதாகவும் காவல் துறையினரின் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.