லக்னோ:உத்தரப் பிரதேச மாநிலம் பதாவ் மாவட்டத்தில் புதுமண தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு மாவட்ட நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது. இதுகுறித்து, அரசு தரப்பு வழக்கறிஞர் அனில் குமார் சிங் கூறுகையில், பதாவ் மாவட்டம் உரைனா கிராமத்தைச் சேர்ந்த கோவிந்த் (24) - ஆஷா (22) இருவரும் காதலித்து வந்த நிலையில் 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.
அதன்பின் டெல்லிக்கு சென்று வாழ்க்கையை தொடங்கினர். சில வாரங்களில் ஆஷாவின் தந்தை கிஷன்பால் டெல்லிக்கு விரைந்து இருவரையும் தனது வீட்டிற்கு அழைத்துவந்தார். அதன்பின் இருவரையும் கொடூரமாக கொலை செய்தார். இதற்கு கிஷன்பாலின் மனைவி ஜல்தாரா, அவர்களது மகன்களான விஜய்பால் மற்றும் ராம்வீர் ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த கோவிந்த்தின் தந்தை பப்பு சிங் போலீசாரிடம் புகார் அளித்தார்.