மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் உள்ள பிரம்மன்படா கிராமத்தில் நேற்று (மார்ச் 28) ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர், இருவர் படுகாயமடைந்தனர். ஆனந்த மௌலே என்பவரது வீட்டில் ஏற்பட்ட மின் அழுத்தம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
மின் அழுத்தத்தால் ஏற்பட்ட தீ விபத்து: நான்கு பேர் உயிரிழப்பு - மின் அழுத்தத்தால் ஏற்பட்ட தீ விபத்து
மும்பை: மகராஷ்டிரா மாநிலத்தில் மின் அழுத்தம் காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
![மின் அழுத்தத்தால் ஏற்பட்ட தீ விபத்து: நான்கு பேர் உயிரிழப்பு மின் அழுத்தத்தால் ஏற்பட்ட தீ விபத்து](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11200457-379-11200457-1617013092249.jpg)
மின் அழுத்தத்தால் ஏற்பட்ட தீ விபத்து
மின் அழுத்தத்தால் ஏற்பட்ட தீ விபத்து
அதிகாலை 2 மணியளவில் ஆனந்த் மௌலே தனது மனைவி, நான்கு குழந்தைகளுடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்துள்ளார். இந்த விபத்தில் ஆனந்த் மௌலேவின் தாய் கங்குபாய் மௌலே, மனைவி துவார்கா மௌலே, மகள் பல்லவி மௌலே, மகன் கிருஷ்ணா மௌலே ஆகியோர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த மேலும் இரண்டு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க:மாணவனின் தலையில் இரும்புக் கம்பியால் அடித்த போதை ஆசாமி: பக்கோடா ஸ்டாலில் கொலை!