காஷ்மீர்: வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லையை மீறி இரண்டு பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். இதனைக் கண்ட ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையினர் இணைந்து பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர். இதனைத் தொடர்ந்து, ஹந்த்வாரா - நாவ்கான் மாநில நெடுஞ்சாலையில் அருகே உள்ள பத்புரா கிராமத்தில் மோட்டார் ஷெல் என்று கூறப்படும் வெடிபொருள் மீட்கப்பட்டது.
முன்னதாக, மே 3 ஆம் தேதி, வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்திலுள்ள மச்சில் செக்டாரின் பிஞ்சாட் என்னும் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.