ராஜோரி : ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் உள்ள பாஜி மால் காடுகளில் இந்திய ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது. வனப்பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத் துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து, ராணுவத்தின் சிறப்புப் படையினரும், காவல் துறையினரும் இணைந்து கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட இந்திய ராணுவம் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. ஜம்மு காஷ்மீரில் உள்ள பிர் பஞ்சால் வனப்பகுதியில், கடந்த சில ஆண்டுகளாக அடுத்தடுத்து என்கவுன்டர்கள் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. பாதுகாப்பு படையினருக்கும் இந்த பகுதி கடும் சவால் அளிக்கக் கூடிய இடமாக காணப்படுகிறது.
பயங்கரவாதிகள் அடர்ந்த காடுகளை பயன்படுத்தி தங்கள் நிலைகளை மறைத்து, நிலப்பரப்பை பயன்படுத்திக் கொள்வதாக கூறப்படுகிறது. பயங்கரவாதிகள் துரோக மலைகள், அடர்ந்த காடுகள் மற்றும் அல்பைன் காடுகளை உள்ளிட்ட இடங்களை பயன்படுத்தி தங்கள் நிலைகளை மறைத்தும் அடிக்கடி தாக்குதலில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.