தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உ.பி.யில் காணாமல்போன 4 மாணவிகள்! - தேசியச் செய்திகள்

உத்தரப் பிரதேசத்தில் கல்லூரி மாணவிகள் நான்கு பேர் திங்கள் முதல் காணாமல்போயுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

lakhimpur kheri college
உத்தரப் பிரதேசத்தில் காணமால் போன நான்கு மாணவிகள்

By

Published : Feb 23, 2021, 2:14 PM IST

லக்னோ: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் நான்குபேர்திங்கள் முதல் காணாமல்போயுள்ளனர். காணாமல்போன நான்கு பேரும் ஆர்யா கன்யா கல்லூரியில் ஒன்றாகப் படித்துவருபவர்கள். கல்லூரி நேரம் முடிந்து நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், மாணவிகளின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும், கல்லூரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்ட கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வுசெய்தனர்.

அதில், மாணவிகள் கல்லூரி சீருடையில் இல்லாமல், வண்ண உடைகளில் இருந்தது கண்டறியப்பட்டது. கோட்வாலி காவல் துறையினர் மாணவிகளைக் கண்டுபிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க:எருமைகளுக்கு பியூட்டி பார்லரா?

ABOUT THE AUTHOR

...view details