தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

wifi-ஆல் செல்போன் மூலம் கட்டுப்படுத்தக்கூடிய துப்பாக்கி; மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கல்லூரி மாணவர்கள் சிலர் wifi உதவியுடன் செல்போன் மூலம் இயங்கக்கூடிய தானியங்கி துப்பாக்கியை கண்டுபிடித்துள்ளனர்.

மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு
மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு

By

Published : Jan 24, 2023, 3:22 PM IST

கோராக்பூர்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை நிறுவனம் (ITM) அமைந்துள்ளது. இதில் மூன்றாம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வரும் மாணவர்களான திக்விஜய் யாதவ், கன்ஹையா யாதவ், கிருஷ்ணா ஷாஹி மற்றும் அனுராக் ஸ்ரீவஸ்தவா ஆகியோர் சேர்ந்து வைஃபை (wifi) வசதிகொண்ட துப்பாக்கியை உருவாக்கியுள்ளனர்.

கோராக்பூர் பகுதியில் இந்த கல்லூரியில் இந்திய ராணுவத்திற்காகப் பல்வேறு ஆயுத அமைப்புகளை உருவாக்கி தந்த Innovation cell எனும் அமைப்புடன் சேர்ந்து இந்த மாணவர்கள் இதனை உருவாக்கி உள்ளனர். இந்த துப்பாக்கி மாதிரியை வேண்டாம் என்று தூக்கி எறியப்பட்ட ஸ்டீல்களை கொண்டு உருவாக்கியுள்ளனர்.

இதுகுறித்து கல்லூரி இயக்குநர் கூறுகையில், 'இந்த துப்பாக்கியை நம் மடிக்கணினி, கணினி மற்றும் ஆண்ட்ராய்ட் போன்கள் மூலம் இயக்க முடியும். சுமார் 100 மீட்டர் தூரம் வரையில் உள்ள இலக்குகளை நம்மால் இதன் மூலம் சுடமுடியும். இதனை ஒரு கிலோ மீட்டர் அளவிற்கு உயர்த்த மாணவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இதுமட்டும் இல்லாமல் இரண்டு அங்குலம் விட்டம் கொண்ட இரண்டு பேரல்களை கொண்டுள்ள இந்த துப்பாக்கியில் இலக்குகளை துல்லியமாக கண்டறிய 360 டிகிரி கேமரா ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. முன்னதாக கல்லூரி மாணவர்கள், ஸ்டீல் வேஸ்டுகளை கொண்டும் ராணுவ வீரர்களுக்கு ஷூ, ஜாக்கெட் மற்றும் ஹெல்மெட் போன்றவற்றை உருவாக்கியும் தந்துள்ளோம்.

இந்த துப்பாக்கிக்கான காப்புரிமையை பெறும் முயற்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். இந்த துப்பாக்கி வரும் குடியரசு தினத்தன்று மக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். மாணவர்களின் இந்த கண்டுபிடிப்பிற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:விபத்தை தவிர்க்கும் விஷேச ஹெல்மெட் - பள்ளி மாணவி கண்டுபிடிப்பு!

ABOUT THE AUTHOR

...view details