மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூரில் உள்ள சந்திரபூர்-மூல் நெடுஞ்சாலையில் நேற்றிரவு (டிச.15) கார் மீது டிராக்டர் மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் காரில் வந்த, சிறுவன் உள்பட நான்கு பேர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் கார் ஓட்டுநர் படுகாயம் அடைந்தார்.
மகாராஷ்டிரா சாலை விபத்து: 4 பேர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்! - Chandrapur-Mul highway
மும்பை: சந்திரபூர்-மூல் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கார்-டிராக்டர் விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிரா சாலை விபத்து
பின்னர் அப்பகுதி காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கு விரைந்த காவலர்கள் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கார் ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:ஓய்வுபெற்ற முதியோர் காப்பகத்தில் தீ விபத்து: 11 பேர் உயிரிழப்பு