ராய்ப்பூர்: சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூர் ரயில் நிலையத்தில் இன்று (அக். 16) காலை வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நான்கு சிஆர்பிஎஃப் வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
ரயில் நிலையத்தில் 122 சிஆர்பிஎஃப் பாட்டாலியன் பிரிவினர், காலை 6.30 மணியளவில் ஜம்மு காஷ்மீருக்குப் புறப்பட இருந்த நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரயில் ஏறிய 3 வீரர்கள்
முதல்கட்ட விசாரணையில், புறப்படத் தயாராக இருந்த சிறப்பு ரயிலில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள் இருந்த பெட்டிகளை நகர்த்திக்கொண்டிருந்தபோது, தரையில் தவறி விழுந்ததால் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இது குறித்து மூத்த அலுவலர் கூறியதாவது, "தலைமைக் காவலர் விகாஸ் சௌகான் பெட்டியைத் தூக்கிச்சென்றபோது தவறி கீழே விழுந்து விபத்தாகியதில், அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பிற மூன்று காவலர்களுக்கு சிறு காயம் என்பதால் முதலுதவிக்குப் பிறகு அவர்கள் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு ரயிலில் புறப்பட்டுவிட்டனர்" என்றார்.
4 சிஆர்பிஎஃப் வீரர்கள் படுகாயம் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சிஆர்பிஎஃப் மூத்த அலுவலர்கள், காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: சிங்கு எல்லையில் படுகொலை: ஒருவர் சரண்; விவசாய அமைப்பு கண்டனம்