டெல்லி:நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால் மக்களவை மதியம் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, காங்கிரஸ் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ், டி.என்.பிரதாபன் 4 பேரும் விலைவாசி உயர்வை கண்டிக்கும் வகையிலான பதாகைகளை வைத்து எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால், சபாநாயகர் ஓம் பிர்லா நான்கு எம்பிக்களையும் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
காங்கிரஸ் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உட்பட 4 பேர் சஸ்பெண்ட் - நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் பதாகைகள்
மக்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்ட மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்பட 4 காங்கிரஸ் எம்பிக்களை சபாநாயகர் ஓம் பிர்லா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் தரப்பில், "எங்களது எம்பிக்களை சஸ்பெண்ட் செய்து, அரசு காங்கிரஸை மிரட்ட முயற்சிக்கிறது. நான்கு எம்பிக்களும் மக்களுக்காகவே குரல் எழுப்ப முயன்றனர். முன்னதாக, நாங்கள் மக்களவையில் பதாகைகளை காட்ட முயற்சித்தோம். ஆனால், அனுமதி வழங்கப்படவில்லை. பிரதமர் மோடிக்கான ஆரவாரத்திற்கு மட்டுமே அனுமதி கிடைக்கிறது. குறிப்பாக நாடாளுமன்றம், உலகின் 4ஆவது பணக்காரரின் குரலை மட்டுமே கேட்கிறது. சாதாரண மனிதனின் குரலை கேட்கவில்லை" எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க:'கடவுளின் பெயரால்...' மாநிலங்களவையில் பதவியேற்றார் இளையராஜா!