ஹோலியின் முதல் நாள் ஹோலிகா தஹான் என அழைக்கப்படுகிறது. இந்நாளில், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு நெருப்பு எரியூட்டப்பட்டுக் கொண்டாடப்படும். ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாகக் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகை கரோனா காரணமாக சில கட்டுப்பாடுகளுடன் கொண்டாட வலியுறுத்தப்படுள்ளது.
அதன்படி, டெல்லி, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பிகார், ஜார்கண்ட், கோவா, உத்தரகாண்ட், மத்தியப் பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று ஹோலிகா தஹான் கொண்டாட்டத்தின்போது, பிகார் மாநிலம் கயா மாவட்டத்தில் நான்கு குழந்தைகள் தீ விபத்தில் சிக்கியுள்ளன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் வைக்கோலில் நெருப்பு பற்றவைத்து விளையாடியுள்ளன.